என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலர் நினைவுச்சின்னம்"
சென்னை:
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ந்தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay